Published:Updated:

மோடி அரசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆந்திரா கட்சிகள்! எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?

மோடி அரசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆந்திரா கட்சிகள்! எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?
News
மோடி அரசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆந்திரா கட்சிகள்! எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?

மோடி அரசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆந்திரா கட்சிகள்! எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?

மத்திய அரசுமீது தெலுங்கு தேசம் கட்சியும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று கொண்டுவருகின்றன.

ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால், பட்ஜெட்மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. அதன் விளைவாகச் சமீபத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவதாகத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.  இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் எம்.பி-க்கள் லோக்சபா செயலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.தி.மு.க எம்.பி-க்களும் இஸ்லாமியர்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கையில்லாத்  தீர்மானம் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று (19.3.2018) தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி 50 எம்.பி-க்களின் ஆதரவைப் பெற்று இன்று தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் சிறிது நேரம்கூட சரியாக நடக்கவில்லை. இன்றுடன் தொடர்ந்து 11 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் ஆந்திரா கட்சிகள் வலியுறுத்தி வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை