Published:Updated:

சென்னை: கத்திப்பாராவுக்குக் கீழே வணிக வளாகங்கள் அமைக்க திட்டம்!

சென்னை: கத்திப்பாராவுக்குக் கீழே வணிக வளாகங்கள் அமைக்க திட்டம்!
சென்னை: கத்திப்பாராவுக்குக் கீழே வணிக வளாகங்கள் அமைக்க திட்டம்!
சென்னை: கத்திப்பாராவுக்குக் கீழே வணிக வளாகங்கள் அமைக்க திட்டம்!

சென்னை: சென்னை கிண்டியில் இருக்கும் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு கீழே பயன்பாடு  இல்லாமல் இருக்கும் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக சிறப்புச்  செயலாள‌ர் கந்தசாமி  கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் '' இந்தியா  முழுவதும் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 

##~~##
மேம்பாலத்தின் உள் மற்றும் வெளிப்பகுதியில் உள்ள காலி இடங்கள் உபயோகம்  இல்லாமல் இருக்கின்றன. அந்த இடங்களை மதிப்புமிக்க இடமாக மாற்ற வணிக  வளாகம், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், அடுக்குமாடி குடியிருப்பாக கட்டி  பயன்படுத்தலாம்.
போக்குவரத்து மேம்பாலம், ரோட்டுக்கு இடையே உள்ள காலி இடங்களுக்கு ‘ஸ்கை  எஸ்டேட்’ என்று பெயர். சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்துக்கு கீழே   ‘ஸ்கை எஸ்டேட்’ திட்டம் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தின்படி இங்கு வணிக  வளாகங்கள் அமைக்கப்படும்" என்றார்.