Published:Updated:

டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

Published:Updated:
டெல்லியில் போராட்டத்தில் குதித்த தமிழக விவசாயிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லி நாடாளுமன்றச் சாலையில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

நீண்ட நாள்களாகக் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே மிகப் பெரும் பிரச்னையாக இருந்து வருவது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம். இது தொடர்பான வழக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாகக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல விவசாய அமைப்புகள் மாநில அரசையும் மத்திய அரசையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கூறிய ஆறு வாரங்கள் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து இன்று முதல் டெல்லி நாடாளுமன்ற சாலையில் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியம் தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகக் கடந்த 21-ம் தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை டெல்லி சென்ற தமிழக விவசாயிகள் காலை 11 மணியளவில் நாடாளுமன்றச் சாலையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய பி.ஆர் பாண்டியன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இல்லையேல் மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும், மத்திய அரசு கர்நாடகச் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. எங்களுக்குக் காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே வேண்டும் அதற்குப் பதிலாகக் காவிரி மேற்பார்வை குழு வேண்டாம் எனக் கூறினார்.