Published:Updated:

`ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை!’ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய முடிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை!’ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய முடிவு
`ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை!’ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய முடிவு

`ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை!’ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய முடிவு

'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவுசெய்துள்ளனர். 

'ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்' என அம்மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குக் கடும் நெருக்கடிகொடுத்து வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி, அக்கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. மேலும், ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்குதேசம், மத்திய பா.ஜ.க தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்துவருவதுடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் அக்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வுக்கு அழுத்தம்கொடுத்துவருகிறது. 

இந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தங்கள் கட்சி எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் மட்டும் ராஜினாமா செய்வார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் தரும் பொருட்டு, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு