Published:Updated:

2ஜி விசாரணை : சி.பி.ஐ. முன்பு அருண் ஷோரி ஆஜர்

புதுடெல்லி, பிப்.25,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக, சிபிஐ முன்பு முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரி இன்று ஆஜரானார். ##~~##

1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை குறித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, உரிமக் கட்டணம் ஆகியவை குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் அருண் ஷோரிக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அவர் கேட்டுக்கொண்டதையடுத்து அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அருண் ஷோரி இன்று சி.பி.ஐ முன் ஆஜரானார்.

முன்னதாக, சி.பி.ஐ. அதிகாரிகள் குழு எழுப்பியிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் 50 பக்கங்களில் முறையான பதிலை தான் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.