Published:Updated:

விஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்

விஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்
விஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்
விஸ்வரூபம் பட பிரச்னை: கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை: விஸ்வரூபம் பட பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"'உலக நாயகன்' என்றழைக்கப்படும் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் அரிய கலைச்செல்வம் ஆவார்.அவரது 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமிய சகோதரர்களையும்,அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாக கூறி,இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அன்பான வேண்டுகோள்.

இப்பிரச்னையில் இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்துகொண்டு,நட்புறவும்,பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

##~~##
எனவே,விஸ்வரூபம் திரைப்படத்தில் தெரிந்தோ,தெரியாமலோ,புரிந்தோ, புரியாமலோ இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாற்று கூறப்படும் நிலையில்,இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல,அவர் ஈடுபட்டுள்ள கலைத்துறை,திரையரங்க உரிமையாளர்கள் அனைவரது நல்லெண்ணத்தையும்,பேராதரவினையும் பெற வேண்டியவர்.
கமல்ஹாசன் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை பற்றியும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்.பல கோடி ரூபாய் முதலீடு என்பதைவிட முக்கியம்,பல தரப்பு மக்களின் ஆதரவு என்ற முதலீடும் முக்கியம்.எனவே இப்பிரச்னையில் ஒருவருக்கொருவர் பேசி தீர்ப்பதோடு,சமூகத்திலும்,சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு இடமின்றி நடந்து கொள்வதே அவசர அவசியம் ஆகும்" என்று கூறியுள்ளார்.