Published:Updated:

விஸ்வரூபம்: பேச்சுவார்த்தை தொடங்கியது; இன்று சுமூகத் தீர்வு?!

Vikatan Correspondent
விஸ்வரூபம்: பேச்சுவார்த்தை தொடங்கியது; இன்று  சுமூகத் தீர்வு?!
விஸ்வரூபம்: பேச்சுவார்த்தை தொடங்கியது; இன்று சுமூகத் தீர்வு?!
விஸ்வரூபம்: பேச்சுவார்த்தை தொடங்கியது; இன்று  சுமூகத் தீர்வு?!

சென்னை: 'விஸ்வரூபம்' பட பிரச்னை தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தை சற்று முன் தொடங்கியது. 

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைவில் தமிழகம் முழுவதும் இப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்'  திரைப்படத்தை தமிழகத்தில்  வெளியிடக்கூடாது என்று, முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து,  தமிழக அரசு இந்தப் படத்துக்கு தடை விதித்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த வழக்கை முதலில்  விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், அரசின் தடை உத்தரவுக்கு தடை விதித்தார். ஆனால்,  தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த  அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர்,  அரசு விதித்த தடையை உறுதி செய்தனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, முஸ்லிம் தரப்பினருடன்  கமல்ஹாசனே பேசி தீர்வு ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தால் அதற்கு அரசு உதவி  செய்யும் என்று கூறி இருந்தார். இதையடுத்து, தலைமைச்

##~~##
செயலகத்தில் முஸ்லிம்  அமைப்பினருடன் கமல் பேசுவதற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால்,  'விஸ்வரூபம்' பட வெளியீட்டுக்காக மும்பை சென்று இருந்த கமல் நேற்று வர  முடியவில்லை.
அவர் சார்பாக, அவரது அண்ணன் சந்திரஹாசன் வந்து இருந்தார். கமல் வந்தால்தான்  நீக்க வேண்டிய காட்சிகள் குறித்து பேசி முடிவு எடுக்க முடியும் என்று, முஸ்லிம்  அமைப்புகளின் நிர்வாகிகள் கூறி விட்டனர்.
இதனையடுத்து மும்பையிலிருந்து கமல், இன்று  சென்னை திரும்பினார். இந்நிலையில் கமலஹாசன், இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் உள்துறை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ள முத்தரப்பு பேச்சு வார்த்தை சற்று முன், தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.   

 இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படும்  சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்று மாலை தீர்வு காணப்பட்டால், தமிழகம் முழுவதும்  'விஸ்வரூபம்" திரைப்படம் விரைவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.