Published:Updated:

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்: தமிழக கலெக்டர்கள் 2 பேருக்கு விருது!

புதுடெல்லி: மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்:  தமிழக கலெக்டர்கள் 2 பேருக்கு விருது!

சிறப்பாக செயல்படுத்தியதற்காக  தமிழக கலெக்டர்கள் 2 பேருக்கு விருது  வழங்கப்பட்டு உள்ளது.

 கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், டெல்லியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழகத்தின் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா,''கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டியது அவசியம். மேலும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களில்  பங்கேற்கும் பெண்களுக்கு பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும்.

இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மிக முக்கியமானது" என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில் , "கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை தொடங்கினால், மானியத் தொகை கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று சேரும்" என்றார்.