Published:Updated:

100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்! - வரலாறு படைத்த டி.சி.எஸ் நிறுவனம்

சத்யா கோபாலன்
100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்! - வரலாறு படைத்த டி.சி.எஸ் நிறுவனம்
100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்! - வரலாறு படைத்த டி.சி.எஸ் நிறுவனம்

இந்தியாவில் முதல்முறையாக 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்று ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்! - வரலாறு படைத்த டி.சி.எஸ் நிறுவனம்

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services) என்பது இந்தியாவில் மென்பொருள் சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்கச் சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். இது தேசிய பங்குச் சந்தை பரிமாற்றத்திலும் மும்பை பங்குச் சந்தை பரிமாற்றத்திலும் உள்ள பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனம் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

நேற்று பங்குச் சந்தை நிறைவடையுமபோது இருந்த மதிப்பைவிட இன்று காலை வர்த்தகத்தின்படி பி.எஸ்.சி (BSE) மதிப்பு 4 சதவிகிதம் அதிகமாகி ரூ. 3,545-யாகப் பங்கு வர்த்தகத்தில் உள்ளது. இது, இதுவரை வரை எந்த நிறுவனமும் தொடாத பங்கு உச்சமாகும். இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,79,332 கோடியாக (102.6 பில்லியன் டாலர்) இருந்தது.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் உள்ள வலுவான ஒப்பந்தங்களே இரட்டை இலக்க வருமான வளர்ச்சிக்கு உதவியத” எனக் கூறினார்