Published:Updated:

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்
News
நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா, உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்காமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

இந்து மல்கோத்ரா, 1983-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். 2007-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் மிக்க இவரின் திறமையைக் கருத்தில்கொண்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்தது. அதேபோல, உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டது.
 
கடந்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் கடும் பிரச்னைகள் நிலவிவருகின்றன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மற்ற மூத்த நீதிபதிகள் புகார் தெரிவித்துவந்தனர். மேலும், நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாகவும் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு, கொலிஜியம் சார்ப்பில் சில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகியும் மத்திய அரசு தங்களின் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டதாகத் தலைமை நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவரைத் தவிர வேறு சில நீதிபதிகளையும், பல்வேறு மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.  இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.