Published:Updated:

திருமணத்திற்கு மறுப்பு: மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

 திருமணத்திற்கு மறுப்பு: மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!
திருமணத்திற்கு மறுப்பு: மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!
 திருமணத்திற்கு மறுப்பு: மாணவி பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

நாகப்பட்டினம்: திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த  கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள குமாரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி  மகன் ராஜசேகர் (23). நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை  செய்து வருகிறார். ராஜாமணியின் அக்கா வசந்தா. இவரது கணவர் பாவாடை.  நெம்மேலியில் வசித்து வருகின்றனர். இருவரும் செங்கல் அறுக்கும் வேலை செய்து  வருகின்றனர். இவர்களின் மகள் மதியழகி (17), பிளஸ் 2 படித்து வருகிறார்.

ராஜசேகர், தன் அத்தை மகள் மதியழகியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.  இதற்காக தனது பெற்றோர் மூலம் முறைப்படி பெண் கேட்டார். அவரது அத்தை  வசந்தாவோ, தன் மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. படித்துக் கொண்டிருக்கிறாள்.  இப்போது திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

##~~##
இதையடுத்து ராஜசேகர், பள்ளிக்கு செல்லும் மதியழகியிடம், தன்னை திருமணம்  செய்துகொள்ளுமாறு கூறினார். மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, இப்போது  திருமணம் செய்யமாட்டேன் என்று மதியழகி கூறிவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜசேகர், ''என்னை திருமணம் செய்துகொள்ள உனக்கு  விருப்பம் இல்லையா, அப்படியென்றால் நீ யாரையுமே திருமணம்  செய்துகொள்ளக்கூடாது" என ஆவேசமாகக் கூறியபடி, பாட்டிலில் எடுத்து வந்த  பெட்ரோலை மதியழகி மீது ஊற்றியதுடன், தீ வைத்தார்.
முகம், கை உள்ளிட்ட இடங்களில் தீப்பற்றிய நிலையில் மதியழகி அலறித் துடித்தார்.  சிகிச்சைக்காக அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவி  மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமன் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.