Published:Updated:

'அதே வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும்!'

'அதே வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும்!'
'அதே வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும்!'
'அதே வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும்!'

சென்னை: என் மகள் பட்ட வேதனையை ஆசிட் வீசியவன் அனுபவிக்க வேண்டும் என்று  வினோதினியின் தந்தை வேதனையும்,ஆவேசமுமாக கூறினார்.

ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால், இன்று மகளின் இழப்பை   தாங்க முடியாமல் வேதனையுடன் கண்ணீர்விட்டபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்," என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி   இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே... அவளுக்கு   அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள்   கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல்   தெரிவிக்கின்றனர்.

##~~##
அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள்   பார்த்து கொண்டே இருந்திருப்போம்.
சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது   அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா...   என்று கூறினாள். அதுதான் இப்போது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
என் மகள் வாழ்க்கையை சிதைந்து சின்னபின்னமாக்கிய அவனுக்கு தூக்கு தண்டனை   கொடுத்தால் ஒரு நொடியில் உயிர் போய்விடும். அது போதாது...என் மகளைபோல   அவனும் வேதனையை அனுபவிக்க வேண்டும்" என்றார்.