

புதுடெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கில், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 2.44 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு, இன்று சீராய்வு மனு தாக்கல் செய்தது.
##~~## |
அந்த மனுவில்," கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.கடந்த 2 நாட்களாக நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தொடர்ந்து நீர் திறப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே கர்நாடகத்தின் நிலையை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.