Published:Updated:

களைகட்டிய காதலர் தினம்!

களைகட்டிய காதலர் தினம்!
களைகட்டிய காதலர் தினம்!

பிப்ரவரி 14ம் தேதி காதல் தினத்தை உலகமே கொண்டாடி வருகிறது. காதலர்  தினத்திற்கு வழக்கம் போலவே எதிர்ப்பு கிளம்புவது போல இந்த ஆண்டும்  கிளம்பியிருக்கிறது.

தர்மபுரியில் காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர்  ஊரையே சூறையாடிய விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

களைகட்டிய காதலர் தினம்!

இந்த சூழ்நிலையில் காதலுக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து சாதி சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்களை அழைத்து கூட்டம் போட்டு வருகிறார். காதலுக்கு ஆதரவு தெரிவித்து  திருமாவளவனும் கம்யூனிஸ்ட்களும் போராடி வருகிறார்கள்.

##~~##
இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஆண்டு காதலர் தினம் தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. காதலர்களுக்கு ஆதரவாக கனிமொழியும் நாளை கவியரங்கத்தை  நடத்துகிறார். நாளைய காதலர் தினத்தையே இன்றே பெரும்பாலான இடங்களில்  காதலர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை கடற்கரையில் வழக்கத்தைவிட காதலர்கள் அதிகமாக தென்பட்டார்கள். காதலர் தினத்தன்று வந்தால் பிரச்னை எதுவும் வந்துவிடும் என்பதால் இன்றைக்கு வந்திருந்தாக  தெரிவித்தார்கள் காதலர்கள். ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், திரையரங்குகள் என காதலர் கூட்டம் நிரம்பி வழிந்தது. காதலர் தினத்தை ஒட்டி கோயம்பேட்டி ரோஜாக்கள் அதிக  அளவில் விற்பனைக்கு வந்தன.