Published:Updated:

`லவ் ஜிகாத்தை தவிர்க்க சிறு வயதில் திருமணம் நிச்சயிக்க வேண்டும்’- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

`லவ் ஜிகாத்தை தவிர்க்க சிறு வயதில் திருமணம் நிச்சயிக்க வேண்டும்’- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
`லவ் ஜிகாத்தை தவிர்க்க சிறு வயதில் திருமணம் நிச்சயிக்க வேண்டும்’- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

`லவ் ஜிகாத்’-ஐ தவிர்க்க, சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நிச்சயிக்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியுள்ளார்.

`லவ் ஜிகாத்தைத் தவிர்க்க, சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நிச்சயிக்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் ஆக்ரா மால்வா தொகுதி எம்.எல்.ஏ கோபால் பார்மர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், 'முன்பெல்லாம், நம் குடும்பத்தில் இருந்த முன்னோர்கள், குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைத்தனர். அந்தக் கணவன் மனைவி உறவு இறுதிவரை நீடித்தது. பெண்ணின் திருமண வயது 18 என்ற `நோய்’ வந்த பிறகுதான், நிறைய பெண்கள் காதலித்து, காதலனுடன் ஓடிப்போய்விடுகிறார்கள். `லவ் ஜிகாத்’ அதிகரிக்கத் தொடங்கின.

குறிப்பாக பள்ளி, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெண்களே `லவ் ஜிகாத்’ வலையில் சிக்குகிறார்கள். அந்தக் குற்றவாளிகள் பெண்களிடம் பாசாங்கு காட்டி, தந்திரமாக வலையில் சிக்க வைப்பார்கள். பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் வரத்தொடங்கும். அதனால், அவர்களின் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.’’

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ கோபால், 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்வது குறித்த அவரது பார்வையை ஞாயப்படுத்தினார். அவர், 'பெண்ணின் திருமண வயது 18 என்ற அரசு சட்டம் நோக்கம் வேறு. ஆனால், கிராமங்களில் சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யும் நடைமுறை வேறு. தனக்கு திருமணம் நிச்சம் செய்யப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்து, பெண் தவறான வழியில் செல்லமாட்டார். `லவ் ஜிகாத்’ என்ற பெயரில், பெண்களை வலையில் சிக்கவைக்கின்றனர். சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்வதம் மூலம், பெண்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம்’’ என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு