Published:Updated:

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

தமிழகத்தில்  3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
தமிழகத்தில்  3 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

சென்னை:  அரபிக் கடலில் லட்சத் தீவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இலங்கை மற்றும் அதையொட்டி உள்ள வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த  தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளது. அதுபோல லட்சத்தீவு மற்றும் கர்நாடக அருகே  அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்றும் நிலை கொண்டிருந்தது.  இந்த இரண்டு தாழ்வு நிலைகளும் நகர்ந்து வந்து ஒன்று சேர்ந்துள்ளது. இதனால்  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு

##~~##
நாட்களாக  மழை பெய்ந்து வந்தது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் இன்று  அதிகாலையில் இருந்தே வானம்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள்  திரண்டிருந்தது. 10 மணி வரை சூரிய கதிர் வீச்சை பார்க்க முடியவில்லை. இந்நிலையில்  10.15 மணி முதல் 10.30 மணி வரை கால் மணி நேரம் மழை வெளுத்து கட்டியது.  சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாட்டத்திலும் மழை பெய்தது. திடீர்  மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில் லட்சத் தீவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது