Published:Updated:

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்! ( படங்கள் )

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ  நடைபயணம்! ( படங்கள் )
மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ நடைபயணம்! ( படங்கள் )

காஞ்சிபுரம்: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  காஞ்சிபுரத்திலிருந்து இன்று இரண்டாம் கட்ட விழிப்புணர்வு நடைபயணத்தை  தொடங்கினார்.

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ  நடைபயணம்! ( படங்கள் )

காஞ்சிபுர மாவட்டம் கோவளம் கடற்கரை கிராமத்தில், தமீம் அன்சாரி தர்கா-வில்  இஸ்லாமியர்களின் வாழ்த்துகளோடு, கொட்டும் மழையில் அவர் தனது நடைபயணத்தை  தொடங்கினார்.

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ  நடைபயணம்! ( படங்கள் )

இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். நடை  பயணத்தை வாழ்த்தி மனித நேய மக்கள் கட்சி முன்னணி தலைவர்களுள்

##~~##
ஒருவரான  பேராசிரியர் ஹைதர் அலி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் பேசினார்கள்..  உலகத்தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நடைபயண பிரச்சாரத்தை தொடங்கி  வைத்தார்..
கேளம்பாக்கம் வழியாக வந்து இன்று திருப்போரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  பேசும் அவர்,  நாளை மாமல்லபுரத்தில் பேசுகிறார்.அதன்பின்னர் 28 ஆம் தேதி  மறைமலை நகரில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்