Published:Updated:

சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு! ( படங்கள் )

சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு!  ( படங்கள் )
சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு! ( படங்கள் )

சென்னை: சென்னை வானகரத்தில் கட்டப்பட்டு வரும் 'வால்மார்ட்' நிறுவனத்தின்  குடோனுக்கு பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் இன்று 'சீல்' வைத்தனர்.

சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு!  ( படங்கள் )

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ளதற்கு எதிர்கட்சிகள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும்  தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர்  ஜெயலலிதாவும் அறிவித்து உள்ளார்.

சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு!  ( படங்கள் )

இந்நிலையில் சென்னை வானகரம் அருகே உள்ள பள்ளிக்குப்பம் மதன கிராமத்தில்   'வால்மார்ட்' நிறுவனம் பெரிய அளவிலான குடோன் கட்டி வருகிறது. 10 ஏக்கர்  நிலப்பரப்பு கொண்ட இதில் 7 ஏக்கரில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

 

இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால்  பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளிக்காத நிலையில் கட்டுமான பணி தொடர்ந்து  நடந்து வருகிறது.

சென்னையில் 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு!  ( படங்கள் )

இதற்கிடையே வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக வியாபாரிகள் கடந்த சில நாட்களுக்கு  முன்பு அந்த குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் குடோன் கட்ட அனுமதி மறுத்து பெருநகர வளர்ச்சி குழுமம் நோட்டீஸ்  அனுப்பியது. இதையடுத்து கட்டிட பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பெருநகர  வளர்ச்சி குழுமத்தை சேர்ந்த அதிகாரிகள் அங்கு சென்று, வால்மார்ட் கட்டடத்திற்கு சீல்  வைத்தனர்.

அனுமதியின்றி கட்டடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு  மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

- படங்கள்: உசேன்