Published:Updated:

முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி!

முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி!
முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி!
முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி!

சென்னை: தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்த  சுந்தரவள்ளி சென்னை மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அரசு கேபிள் டிவி பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, அந்த துறையின் நிர்வாக  இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரிய பொது  மேலாளர் லதா, கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சரவணவேல்ராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக  மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க இணை மேலாண் இயக்குனர் சுப்பையன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்  வாரியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

##~~##
கிருஷ்ணகிரி முன்னாள் கலெக்டர் பூஜா குல்கர்னி, தொழில்துறை இணை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவைத்துறை கமிஷனராக இருந்த டாக்டர் ஆர்.கண்ணன்  சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா நில அளவைத் துறைக்கு  மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை செயலாளர் தங்க கலியபெருமாள் வீட்டு வசதி மற்றும் ஊரக  வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிராவிடர்  நலத்துறை ஆணையராக இருந்த சிவசங்கரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பஷீர்  அகமது, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை செயலாளராக  இருந்த அசோக் டோங்ரே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பொருளாதாரம்-புள்ளியியல், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால்துறை  உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக  அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.