Published:Updated:

மதுவிலக்கு கோரி 23வது நாளாக சசிபெருமாள் உண்ணாவிரதம்

மதுவிலக்கு கோரி 23வது நாளாக சசிபெருமாள் உண்ணாவிரதம்
மதுவிலக்கு கோரி 23வது நாளாக சசிபெருமாள் உண்ணாவிரதம்
மதுவிலக்கு கோரி 23வது நாளாக சசிபெருமாள் உண்ணாவிரதம்

சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் 23வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று அவரது மகன் கூறியுள்ளார்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, தமிழக லட்சிய குடும்பம் சார்பில் கடந்த ஜனவரி 30ம் தேதி, மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே சேலத்தை சேர்ந்த சசிபெருமாள் (57) தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலும் காந்திய வழியில் உண்ணாநிலை இருந்ததோடு மவுன விரதமும் இருந்தார். நாட்கள் செல்லச்செல்ல அவரது  உடல் நிலை மோசமானது.

புழல் சிறையில் அவர் உடல் நிலை மோசமானது அடுத்து கடந்த 18ம் தேதி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கும் தொடந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவது மகன் விவேக் மற்றும் நண்பர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று போலீசாரை குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 23 நாட்களாக காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறுகையில், ‘‘எனது தந்தை பூரண மது விலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறார். மெரீனா பீச்சில் உள்ள காந்தியடிகள் சிலையின் காலடியில் உண்ணாவிரதம் இருந்தவரை பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கடந்த 30ம் தேதி கைது செய்தனர். சிறையிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்று அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கும் போட்டுள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்து அவரை உடனே விடுதலை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்றார்.