Published:Updated:

`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது!’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சட்டவிரோதமானது என்று கூறி காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கர்நாட ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் குமாரசாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததை ஏற்று, அவர் நாளை மறுநாள் (23.5.2018) கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாயாவதி உள்ளிட்டோரை டெல்லியில்  இன்று சந்தித்து அழைப்பு விடுத்தார். மேலும், தேசிய அளவில் பல்வேறு தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் முடிவை எதிர்த்து அகில பாரத இந்து மகாசபா என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பருன் குமார் சின்ஹா என்பவர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு