Published:Updated:

ஈசா யோகா மையம் மீது ஆக்கிரமிப்பு புகார்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

 ஈசா யோகா மையம் மீது ஆக்கிரமிப்பு புகார்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
ஈசா யோகா மையம் மீது ஆக்கிரமிப்பு புகார்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

சென்னை:

 ஈசா யோகா மையம் மீது ஆக்கிரமிப்பு புகார்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஈசா யோகா மையம் மீதான ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் ஈசா யோகா மையம் சார்பில் கோவையில் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம், கோவை கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தொடர்ந்த வழக்கில், ''ஈசா யோகா மையம் கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்த இடம், வனப்பகுதியில் யானை வழித்தடப்பகுதியில் உள்ளது. இங்கு கட்டடம் கட்ட அனுமதி இல்லை. ஆனாலும் கட்டடம் கட்டியுள்ளனர். இதெல்லாம் சட்ட விரோதமானது. தற்போது

##~~##
இங்கு மகாசிவராத்திரி விழா நடக்க உள்ளது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அது யானை உள்பட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்பட்டும். சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும். மகாசிவராத்திரி விழாவை நடத்த கூடாது'' என்று கோரி இருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதல் பெஞ்ச், ''மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பை தடுக்க தவறியது ஏன்? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஈசா யோகா மையம் சார்பில் கோவையில் நடத்தப்படும் மகாசிவராத்திரி விழாவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வன விலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் மகா சிவராத்திரி விழாவை கொண்டாட வேண்டும். பிரமாண்ட விளக்குகள், மைக் செட் போடக்கூடாது. இதையெல்லாம் கோவை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.