Published:Updated:

மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில்  ஏற்பாடுகள் தீவிரம்!
மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

கோவை: மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஈஷா யோகா மையத்தில் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சிவன் அமர்ந்து தவம் செய்திட்ட வெள்ளியங்கிரியில் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தி வருகிறது ஈஷா அறக்கட்டளை. மிகுந்த உற்சாகத்துடனும், ஆன்மீகத் தீவிரத்தன்மையுடனும் கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா, இரவு முழுவதும் நடைபெறும். சத்குரு ஜக்கிவாசுதேவ் பங்கேற்கும்  சத்சங்கத்தில் உலகெங்கிலிருமிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்க‌ள் கலந்து கொ‌ள்கின்றனர்.

மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில்  ஏற்பாடுகள் தீவிரம்!

''சத்சங்கங்க‌ள், சக்தி வா‌ய்ந்த தியானங்களோடு, உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் சேர்ந்து பார்வையாளர்களை ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை அறிந்துணரும் வா‌ய்ப்பை அளிக்கின்றன'' என்று பக்தர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

அதன்படி இந்தாண்டு 19வது ஆண்டாக ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா மார்ச் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் மக்கள் நேரடியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி, மாலை 5.40 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5.40 மணிக்கு சத்குரு அவர்கள் நடத்தும் பஞ்சபூத ஆராதனையுடன் இந்த வருட கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. பஞ்சபூத ஆராதனை என்பது உடலின் அடிப்படையான ஐந்து இயற்கை மூலக்கூறுகளை சுத்தப்படுத்தி அதன் மூலம் உடல் நலத்தையும் நல்வாழ்வையும் பெறுவதற்கு வகைசெய்கிறது.

மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில்  ஏற்பாடுகள் தீவிரம்!

மஹாசிவராத்திரி மேடையில், ஆதிசங்கரர் அருளிய 'நிர்வாண ஷடக்க'த்தை ஈஷா பிரம்மச்சாரிகள் உச்சரிக்க கொண்டாட்டங்கள் துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து சத்குரு ஜக்கிவாசுதேவ் பங்கேற்பாளர்களை சில ஆன்மீக செயல்பாடுகளுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுத்துவார். புனித நாளான மஹாசிவராத்திரியன்று ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தயாரித்த அன்னதானம் பங்கேற்கவிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்படுகிறது.

சரியாக நள்ளிரவில், சக்தி வாய்ந்த நள்ளிரவு தியானத்திற்கு, சத்குரு, பங்கேற்பாளர்களுக்கு தீட்சை அளிக்கிறார். மறுநாள் காலை 6 மணிக்கு, சத்குரு அவர்களின் பிரத்யேக மந்திர உட்சாடனத்துடன் விழா நிறைவடையும். கண்களுக்கும், உள்ளங்களுக்கும் விருந்தாய் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், ரகு தீட்சித் ப்ராஜெக்ட் (நாட்டுப்புற இசைக்குழு) மற்றும் பல இசைக் கலைஞர்களுடன் சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவும் நடக்கிறது.

மகா சிவராத்திரி கொண்டாட்டம்: ஈஷா யோகா மையத்தில்  ஏற்பாடுகள் தீவிரம்!

ஈஷா யோகா மையத்துக்கு வந்து இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொ‌ள்ள முடியாதவர்களுக்காக, இந்நிகழ்ச்சிக‌ள் தொலைக்காட்சிகளிலும், இணைய தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதுதவிர இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் 150க்கும் அதிகமான ஈஷா மையங்களும் விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

ஈஷா யோக மையம், கோவையிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் வெ‌ள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்து‌ள்ளது.