Published:Updated:

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம்!

ராமேஸ்வரம்: மாசி மகா சிவன்ராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.

மாசி திருவிழாவின் 9ஆம் நாளான்று காலை கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து அருள்மிகு ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களை பக்தர்கள் கோயிலின் நான்கு ரத வீதிகளில் இழுத்து வந்தனர்.

##~~##
இதில் வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
- இரா.மோகன்