Published:Updated:

கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது- வெள்ளையன்

கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது- வெள்ளையன்
கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது- வெள்ளையன்
கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது- வெள்ளையன்

சென்னை: டெசோ அமைப்பின் சார்பில் 12ஆம் தேதி நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தின்போது கடைகளை அடைக்கும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை கண்டித்து 2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் கடைஅடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. முத்துக்குமார் தீக்குளித்ததற்காக தமிழகத்தில் ஏற்பட்ட இனவெழுச்சிக்கு இடையில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது.

அரசியல் ஆரவாரத்திற்கு இடையே கொடியவன் ராஜபக்சே இனப்படுகொலையை இடையூறு இன்றி ஈழத்தில் நடத்தி முடித்துவிட்டான்.அன்று அமெரிக்கா வேடிக்கை பார்த்ததற்கும் இப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற மனிதாபிமானமே காரணம் என்று நம்புவோம்.

##~~##
ஆற்றாது அழுது கண்ணீர் சிந்தியபோதும் சிந்தை இறங்காமல் அமெரிக்கா கள்ள மவுனம் சாதித்ததற்கு இந்திய அரசின் தலையீடு காரணமாக இருக்காது என்று நம்புவோம்.இலங்கையில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்பதையும் இனப்படுகொலைக்காக இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை தேவை. இனப்படுகொலைக்காக ராஜபக்சே சகோதரர்களை கூண்டில் நிறுத்தவேண்டும் என்பதை எங்கள் பேரவை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியா கொண்டுவரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருப்பதை நாங்கள் வழிமொழிகிறோம். டெசோ அமைப்பும் இந்த கருத்தை வழிமொழியவேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அந்த அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியாக வழிகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு கடையடைப்பு செய்யவேண்டும் என்று வணிகர்களை கட்டாயப்படுத்தவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வெள்ளையன் தெரிவித்துள்ளார்.