Published:Updated:

மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்

மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்
மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்
மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்

 சர்ச்சைக்குரிய சூழலில், கோவை  மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா நேற்று இரவு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

வெள்ளியங்கிரியில் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தை ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தி வருகிறது ஈஷா அறக்கட்டளை. அதன்படி 19வது ஆண்டாக ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா மார்ச் 10 ஆம் தேதி இரவு துவங்கி, 11 ஆம் தேதி காலை வரை நடந்தது. இந்த விழாவை தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு கூடுதல் பரபரப்புடன் கவனிக்கப்பட்டது

நேற்று மாலை 5.40 மணிக்கு தியானலிங்க வளாகத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் கொண்டாட்டங்கள் துவங்கின. ஆதிசங்கரர் அருளிய 'நிர்வாண ஷடக்க'த்தை ஈஷா பிரம்மச்சாரிகள் உச்சரிக்க கொண்டாட்டங்கள் துவங்கின. தொடர்ந்து, சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடந்தது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், ரகு தீட்சித் ப்ரா ஜெக்ட் (நாட்டுப்புற இசைக்குழு) மற்றும் பல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன‌.

இரவு 9 மணிக்கு, மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக வெளியங்கிரி மலையில் திரண்டிருந்த‌ லட்சக் கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சத்குரு ஜக்கிவாசுதேவ் தோன்றி உரையாற்றினார்.

மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்

"மஹாசிவராத்திரி மனித விழிப்புணர்வில் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் இந்தியா முழுக்கவே இந்நாளில் இரவு கண் விழித்து சாதனா செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், அதன் முக்கியத்துவத்தை இன்று நாம் மறந்து விட்டோம். அந்த கலாச்சாரத்தை மீண்டும் மலரச் செய்ய விரும்புகிறோம். அது உங்கள் கையில் தான் இருக்கிறது," என்றார்.ஜக்கிவாசுதேவ். அவரது உரையைத் தொடர்ந்து  நள்ளிரவு தியானமும் நடந்தது.

மனித விழிப்புணர்வும் மஹா சிவராத்திரியும் - ஜக்கிவாசுதேவ்

பிரசித்திபெற்ற நள்ளிரவு தியானத்திற்கு பின்னர் சத்குரு, பங்கேற்பாளர்களுக்கு தீட்சை அளித்தார்.  அதிகாலை 6 மணிக்கு, பிரத்யேக மந்திர உட்சாடனத்துடன் விழா நிறைவுக்கு வந்தது. இந்த விழாவில் வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற் உத்தரவுப்படி விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர்.  இதுதவிர இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள‌ 150-ற்கும் மேற்பட்ட‌ ஈஷா மையங்களிலும் மஹாசிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டதாக. தெரிவிக்கிறது ஈஷா யோகா மையம்

 

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்