Published:Updated:

கொடைக்கானலில் பாதரசம் கழிவுகளை அகற்ற மாணவர்கள் கோரிக்கை

Vikatan Correspondent

சென்னை: கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள பாதரசம் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் அர்ச்சனா, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

தெர்மா மீட்டர் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம், 1983ம் ஆண்டு கொடைக்கானலில் தெர்மா மீட்டர் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கியது. 2001ம் ஆண்டு வரை உற்பத்தி செய்தனர். கண்ணாடி தொழிற்சாலை என்று லைசென்ஸ் வாங்கி விட்டு, தெர்மா மீட்டர் தயாரித்தனர்.

##~~##
பாதரசம் மோசமான விஷத்தன்மை கொண்டது. அதன் பாதிப்பால், அந்த நிறுவனத்தில் வேலைபார்த்த பல ஊழியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் பிறவி ஊனம் ஏற்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் கழிவுகள், மலைபகுதியில் கொட்டப்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இப்போதும் இருந்து வருகிறது. கண் இல்லாமல், காது இல்லாமல், இதய குறைபாடு என்று இப்போதும் குழந்தைகள் பிறக்கின்றனர்.
அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் டன் கழிவு பாதரசத்தை அகற்ற வேண்டும்; பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்; மருத்துவ உதவி கேட்டுள்ளோம். 2500 பள்ளி மாணவ, மாணவிகள் தயாரித்துள்ள இதயம் வடிவ பொம்மையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று ஒப்படைக்கிறோம்.
இவ்வாறு அர்ச்சனா கூறினார்.