Published:Updated:

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் ராஜினாமா

புதுடெல்லி, மார்ச் 3,2011

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ##~~##

கேரளாவில் ஊழல் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, பி.ஜே. தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார்.

தாமஸின் நியமனம் செல்லாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஜேபி மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மீதான மதிப்பு மீண்டும் திரும்பியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
 

அடுத்த கட்டுரைக்கு