Published:Updated:

`உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்?' - மனோகர் பாரிக்கர் சர்ச்சைப் பேச்சு!

'நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்?' என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் போல, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கோவாவுக்கு கொண்டுவரப்படும் மீன்களில், பார்மலின் என்ற ரசாயனத் திரவம் கலந்து, அவை பாதுகாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், மீன்கள் விற்கப்படும் இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதையடுத்து, அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சோதனை செய்யப்பட்ட மீன்களில் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இருந்தபோதிலும் கோவா மாநிலம் முழுவதும் மீன் விற்பனைக்கு 15 - நாள்களுக்குத் தடைவிதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவா முதல்வரிடம் செய்தியாளர் ஒருவர், தற்போது மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு விற்கப்பட்ட மீன்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். `நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதனை செய்ய முடியும்?' என்று கோபமாகப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய பாரிக்கர், `நாங்கள், மீன்கள்குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளோம். சந்தேகமிருந்தால், அதுகுறித்து நிபுணர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்களும் உங்கள் நிருபர்களும், குழப்பான கருத்துக்களையே மக்கள் முன் வைக்கின்றீர்கள். மேலும், மீன் தடைக்கு முன்பிருந்த மீன்கள் நிலைகுறித்துப் பேச விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
 
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism