Published:Updated:

"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

Published:Updated:
"மோடியை வைத்தே திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

டந்த வருடம் தமிழக மாணவி ஒருவர் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அப்போது, பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.க-வுக்கும் அரசியல் நெருக்கம் இருந்தது. பிரதமரின் அலுவலகத்திலிருந்து அந்த மாணவி கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட மாணவியின் பள்ளிக்கூடத்துக்கு நேரில் விசிட் அடித்தார். மின்னல்வேகத்தில் புதிய கழிவறை கட்ட ஏற்பாடுகள் துவங்கின. தற்போது, கழிவறை கட்டி முடிக்கப்பட்டபோது, பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.க-வுக்கும் நட்பு முறிந்துவிட்டது. அதனாலோ...என்னவோ!  கடந்த 45 நாள்களுக்கு மேல், புதிய கழிவறைகள் முழுவதுமாகக் கட்டிமுடிக்கப்பட்டு, பூட்டியே வைக்கப்பட்டிருந்தன. அமைச்சர் செங்கோட்டையன் வருவார்... மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி வருவார்...இப்படி ஒவ்வொருவரிடமும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு அலையாய் அலைந்தனர்.

இந்தநேரத்தில்தான், எடப்பாடி அரசின் ஊழல் மலிந்துகிடப்பதாக பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரிடையாகக் குற்றம்சாட்டினர். இதற்கு, அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் காட்டமான பதில் சொல்லிவருகின்றனர். இந்தக் களேபேரத்தில், ஜூலை 16-ம் தேதியன்று கழிவறையைத் திறக்க யாராவது வி.ஐ.பி. வருவார்களா? என்று பள்ளித் தரப்பினர் கடைசி முயற்சியைத் தொடர்ந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. ``பிரதமர் மோடியிடம் புகார் கடிதம் அனுப்பித்தானே கழிவறை கட்ட வைத்தீர்கள். அவரை வைத்தே திறந்துகொள்ளுங்கள்" என்று அ.தி.மு.க-வினர் சொன்னதாகக் கூறப்படுகிறது. கழிவறைகளைத் திறக்க வி.ஐ.பி-கள் யாரும் வராதநிலையில், வேறு வழியில்லாமல் பள்ளியைச் சேர்ந்தவர்களே, மாணவிகளின் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டனர். 

"மோடியை வைத்தே  திறந்து கொள்ளுங்கள்!" - இது டாய்லெட் 'லாபி'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவி கடிதம் எழுதிய பின்னணி;

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1850 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. பல வருடங்களாக மாணவிகள் தவித்து வந்தனர். ப்ளஸ் டூ மாணவியான கலைவாணி மனம் வெறுத்துப்போய் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார். அந்த மாணவி படிப்பை முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே சென்றார். அதுவரையில், புதிய கழிவறைகள் கட்டித்தருவது பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை. அதையடுத்து, மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அது பிரதமர் கவனத்துக்குப் போனதும்தான், விறுவிறுவென நடவடிக்கைகள் எடுத்தனர். 

கீரனூர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை நம்மிடம் கூறும்போது, 

``இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் கடந்த சில வருடங்களாக கஷ்டப்பட்டு வந்தனர். பிரதமருக்குக் கடிதம் போனதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கு வந்தார். அப்போது, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமாரை அழைத்து, கழிவறையைக் கட்டிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாராம். அதையடுத்து, அந்தச் சங்கத்தின் சார்பில் ரூ.7.5 லட்சம் மதிப்பில் 10 கழிவறைகளை கட்டிமுடித்தனர். ஒன்றரை மாதங்கள் ஆகியும், கழிவறைகளை மாணவிகள் பயன்படுத்த முடியவில்லை.கழிவறைகளைத் திறக்க அமைச்சரோ, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ வராமல் நழுவினர் என்பதுதான் காரணம். அதையடுத்து, கழிவறை கட்டியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார், மாவட்டத் தலைவர் ராமசாமி மற்றும் செயலாளர் சண்முகநாதன்..ஆகியோர் முன்னிலையில் பள்ளியைச் சேர்ந்தவர்களே கழிவறைகளை மாணவிகள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிட்டனர். நீண்ட நாளைய பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism