Published:Updated:

`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

Published:Updated:
`எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா?'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில்,  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, சத்துணவு ஊழியரை சமைக்க விடாமல் தடுத்துநிறுத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அமைந்துள்ளது, திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளிக்கு, சமீபத்தில் சத்துணவு ஊழியராகப் பணியிட மாற்றம் பெற்று வந்தார், பாப்பம்மாள் என்ற சமையலர். இவர்,  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பள்ளியில் படிக்கும் மற்ற சாதி மாணவர்களுடைய பெற்றோர்கள் அவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளியின் சத்துணவுக் கூடத்தை ஆக்கிரமித்து, தாங்களாகவே உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, பாப்பம்மாளை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அதிகாரிகளுக்கு அழுத்தம்கொடுத்து, தற்போது அவரை மீண்டும் பழைய பள்ளிக்கே மாற்றம்செய்ய வைத்திருக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பம்மாளிடம் பேசினோம். ``எனக்கு சொந்த ஊரே இந்த திருமலைக் கவுண்டம்பாளையம்தான். இந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 12 வருஷமா சத்துணவு ஊழியரா வேலை பார்த்துட்டு வர்றேன். சமீபத்தில், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலைபார்த்து வந்த சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றுவிட்டார்.  அதனால், எனக்கு என் சொந்த ஊரிலேயே மாத்திக் கொடுத்தாங்க. நானும் சந்தோஷமா அந்த ஸ்கூலுக்கு வேலை பார்க்கப்போனேன். செவ்வாய்க்கிழமை ஆர்டரைக் கொண்டுபோய் கொடுத்துட்டு சமையல்கூடத்துக்குள்ள நுழைஞ்சதுதான் தாமதம். ஊர்க்காரங்க சிலபேர் கூடிவந்து, ``நீ எப்படி எங்க புள்ளைங்களுக்கு சமைச்சுப்போடலாம்? உன் கைப்பட்ட சோத்த எங்க பசங்க திங்கனுமான்னு"  திட்ட ஆரம்பிச்சாங்க. கூனிக்குறுகி போயிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் சாதிப் பேரைச் சொல்லி திட்டி, உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடான்னு  நா கூசுர வார்த்தைகளால நோகடிச்சு, என்னை அந்த சமையல்கூடத்துல இருந்தே வெளியே போகச் சொன்னாங்க. என்னால யாரை எதிர்த்துப் பேச முடியும். அமைதியா வந்துட்டேன். புதன்கிழமை இன்னும் ஆட்களை அதிகமா கூட்டிட்டு  வந்து ரகளை பண்ண ஆரம்பிச்சாங்க. டீச்சருங்க கிட்டே போய் பாப்பம்மா இங்கே இருந்தா, எங்க குழந்தைங்களை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க. அதிகாரிகளும் அவங்க சொல்றதைக் கேட்டுட்டு என்னோட டிரான்ஸ்பரை ரத்து பண்ணி, பழையபடி, ஒச்சாபாளையம் ஸ்கூலுக்கே போகச் சொல்றாங்க. நாங்களும் மனுசங்கதானே சார். எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா சார் என்ற வார்த்தைகளுக்குப் பின் வந்த அவரது கண்ணீரை யாராலும் தடுக்கமுடியவில்லை.

 பிற சாதியினர், பாப்பம்மாளை மிரட்டிய விவகாரம், தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, பாப்பம்மாளுக்கு ஆதரவாக அவிநாசியை அடுத்துள்ள சேவூர் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், மாற்று சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீதும் அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பம்மாளை திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சம்பவம்குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேசினோம். `` தற்போது தாசில்தார் தலைமையில் மீட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்தை ரத்துசெய்துவிட்டு, திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவிருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டார்.