Published:Updated:

வெளிநாட்டுக்குத் தப்ப திட்டமா? - பாஸ்போர்ட்டை திரும்ப கேட்கிறார் அழகிரி மகன்!

வெளிநாட்டுக்குத் தப்ப திட்டமா? - பாஸ்போர்ட்டை திரும்ப கேட்கிறார் அழகிரி மகன்!
வெளிநாட்டுக்குத் தப்ப திட்டமா? - பாஸ்போர்ட்டை திரும்ப கேட்கிறார் அழகிரி மகன்!
வெளிநாட்டுக்குத் தப்ப திட்டமா? - பாஸ்போர்ட்டை திரும்ப கேட்கிறார் அழகிரி மகன்!

மதுரை: தனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழைரியின் மகன் துரை தயாநிதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிப்பதாக கூறப்படுகிறது. 

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் கொள்ளைக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ஒலிம்பஸ் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக, அதன் முன்னாள் பங்குதாரரும், மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இதற்கிடையே பி.ஆர்.பி&க்கு ஜாமீன் கிடைத்ததால், அதை மேற்கோள் காட்டியே அழகிரியின் வக்கீல்கள் துரை தயாநிதிக்கும் நிபந்தனை ஜாமீன் வாங்கினார்கள். கீழவளவு காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்து போட வேண்டும், தனது பாஸ்போர்ட்டை மேலூர் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி, அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை மேலூர் கோர்ட்டில் ஒப்படைத்திருந்தார்.

##~~##
ஆனால், படிப்படியாக துரை தயாநிதியின் மீதான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. தற்போது அவர் கீழவளவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போடத் தேவையில்லை என்பதால், சென்னை, டெல்லி என்று சுற்றி வருகிறார். இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி நேற்று அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "நான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதால், வெளிநாடுகளில் எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. பாஸ்போர்ட் இல்லாததால் நிறைய இழப்புகளைச் சந்தித்து வருகிறேன். எனவே, எனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியதைத் தொடர்ந்து மு.க.அழகிரியும் தனது மந்திரி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதாகிவிட்டது. கிரானைட் முறைகேடு வழக்குகளைத் தொடர்ந்து பொட்டு சுரேஷ் கொலை வழக்கிலும் போலீஸாரின் சந்தேகப் பார்வை துரை தயாநிதி மீது படர்ந்திருப்பதால் மீண்டும் கைது அச்சம் அவரை சூழ்ந்திருப்பதாக மதுரை உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியிலேயே அவர் பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கிக் கொண்டு வெளிநாடு பறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது!
-
கே.கே.மகேஷ்