Published:Updated:

கோவில்பட்டியில் முத்துராமலிங்கதேவர் சிலை உடைப்பு; பதட்டம்!

கோவில்பட்டி:கோவில்பட்டியில் முத்துராமலிங்கதேவர் சிலை உடைப்பு சம்பவம் எதிரொலியாக சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பஸ்கள் இயக்கப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் நேற்று இரவில் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலையை மர்ம நபர்கள் சிலர் உடைத்துவிட்டனர்.

தொடர்ந்து ஒரு பிரிவினர் கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படவில்லை. மாவட்ட எஸ்.பி&யான ராஜேந்திரன் தலைமையில் ஏராளமாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவி வருகிறது.


- எஸ்.சரவணபெருமாள்