Published:Updated:

சிறுவாணிக்கும் செக் வைக்கும் கேரளம்! .

சிறுவாணிக்கும் செக் வைக்கும் கேரளம்! .
சிறுவாணிக்கும் செக் வைக்கும் கேரளம்! .

கோவை: சிறுவாணி ஆற்றில் கூடுதலாக போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டது கேரளா.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறுவாணி ஆற்றில் கூடுதல் போர்வெல் போடுவதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்திருக்கிறது.

சிறுவாணிக்கும் செக் வைக்கும் கேரளம்! .

\இது தொடர்பாக கேரள மாநில அதிகாரிகளும், தமிழக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளும் இன்று பாலக்காட்டில் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

##~~##
சிறுவாணியில் கூடுதலாக போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்தால், கேரள மாநிலத்தின் மன்னர்காடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கேரள அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியதால் இன்றைய கூட்டத்தில் சுமூக தீர்வு ஏதும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது,
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா, இப்போது சிறுவாணிக்கும் செக் வைத்திருக்கிறது.