Published:Updated:

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!
பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!
பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!

சென்னை: தீ விபத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி, இன்று காலமானார்.

.சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

##~~##
சுகுமாரியுடன் நெருக்கமான நட்புடையவர் என்பதால், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்து, அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.