Published:Updated:

ஜான்பாண்டியன் வைச்ச மரங்களை வெட்டிட்டாங்க‌ - சேலம் தடாலடி

சேலம்:  சேலம் மத்திய சிறைக்குள் இருந்த மரங்களை வெட்டி வீழ்த்திய விவகாரம் இயற்கை ஆர்வலர்களை பதற வைத்திருக்கிறது.

##~~##
சேலம் மத்திய சிறைக்குள் உள்ள மிகப் பழமையான வேம்பு, புங்கை உள்ளிட்ட‌ மரங்களை திடீரென வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். காரணம் கேட்டால் சொல்வதற்கு ஆள் இல்லை.
மரத்து நிழலில் சிறைக் கைதிகள் சுக போகமாக இருப்பதாக வந்த புகார்களை அடுத்தும், கைதிகள் சிலர் மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுவதை தடுப்பதற்காகவும் மரங்களை வெட்டி வீழ்த்துவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சொல்கின்றன‌.
கொலை வழக்கில் ஜான்பாண்டியன் இங்கே ஏழாண்டுகள் தண்டனை கைதியாக இருந்தார். அப்போது சப்போட்டா, கொய்யா, பலா உள்ளிட்ட மரங்களை நட்டு வளர்த்து வந்தார். பலன் கொடுத்துக் கொண்டிருந்த அந்த மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திவிட்டார்கள்..
மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டையேவா கொளுத்துவார்கள்?
வீ.கே.ரமேஷ்