Published:Updated:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது!

கல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றி  உள்ள  சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், மணவையூர், குன்ற‌தூர், நல்லாத்தூர், வாயலூர், கொக்கிமேடு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது!

அணுமின் நிலையம் அதைச் சுற்றி உள்ள கிராமப்புறத்தினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதைத் தவிர்த்து காமன் (Gamman)  என்ற நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. அந்நிறுவனம் ஊதியம் குறைவான, மிகவும் கீழ்மட்ட பணிகளை மட்டும் உள்ளூர் மக்களுக்கு கொடுத்துவிட்டு, மற்ற உயர் ஊதியப்  பணிகளுக்கு பிற‌ மாநிலத்தவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.

அப்படி இவர்களுக்கு கொடுக்கும் குறைவான ஊதியத்திலும் கமிஷனாக ஒரு தொகை பிடித்துக் கொள்கிறார்கள். அதேபோல அணுமின்நிலையத்துக்குள் வேலைக்குச் செல்ல கேட்பாஸ் வேண்டும். அதை மாதம் ஒருமுறை காவல் நிலையம் சென்று புதிப்பிக்க வேண்டும். கேட் பாஸை ஒவ்வொருமுறை செல்லும்போதும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைஉள்ளது.
 

எனவே இப்பகுதி மக்கள் தங்கள் முக்கிய கோரிக்கைகளான  1979ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி சுற்றுப்புறகிராம மக்களுக்கு வேலை வழங்க வேண்டியதை வலியுறுத்தியும், அணுமின்நிலைய ஊழியர்களின் குழந்தைகளைப் போல இங்குள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும், அணு மின்நிலைய ஊழியர்களின் குடியிருப்புக்களுக்கு அளிப்பதுபோல 24 மணிநேர மின்சாரம் வேண்டியும், இப்பகுதியில்   புதிய அணுமின் திட்டங்கள் தொடங்கக் கூடாது,  இந்தியாவில் உள்ள‌ அணுமின்நிலையக் கழிவுகளை இந்தப் பகுதிகளில் சேமித்து வைக்கக்கூடாது மற்றும் கதிர் வீச்சு பாதிப்புக்களை அறியவும், அத‌ற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துமனைகளை கட்டுவது ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 500 பேர் கைது!

இப் போராட்ட‌த்தின் ஒரு பகுதியாக  கடந்த 26ஆம் தேதி கூடங்குளத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு அளிப்பது போல உள்ளூர் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களை  அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலர் அப்துல் சமது , ம‌.தி.மு.க. மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலளர் கிட்டு ஆகியோர் முன்னின்று போராட்டம் நட‌த்தினர். போராட்டக் குழுவினர் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

##~~##
இதனைக் கண்டித்து கல்பாக்கம் சுற்றுப்புறகிராம மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் இன்று  கல்பாக்கம் அணுமின்நிலையத்தை கடற்கரையோரம் சென்று முற்றுகையிட முயன்றனர். இவர்களை கைது செய்த காவல் துறையினர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி& படங்கள்: பா.ஜெயவேல்