Published:Updated:

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடுகின்றனர்: ஞானதேசிகன்

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களைச் சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுவதாக: அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாணவர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களை காங்கிரஸ் கட்சியினர் ஓட ஓட விரட்டி உருட்டுக் கட்டையால் தாக்கினர்.

இந்நிலையில் காங்கிரசாரின் இந்த தாக்குதலை கண்டித்து, கோவை உள்ளிட்ட பல இடங்க:ளில் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

##~~##
இதனிடையே சென்னையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், "காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களைச் சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுகின்றன. மாணவர்கள் என்ற போர்வையில் சமூக விரோத சக்திகள் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தின.
மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்றார்.