Published:Updated:

எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்

எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்
எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வாசிக்கப்பட்ட வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய 27 லட்சம் ஒதுக்கி இருக்கிறார்கள்.

எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்

மேயர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 301 கோடிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் முக்கியமான இரண்டு திட்டங்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்தது.

''திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் 5,881 தெருநாய்கள் சுற்றித்திரிவதாக (எப்புடி இவ்ளோ துல்லியமா கணக்கு எடுத்தாங்க) கணக்கிடப்பட்டுள்ளது. அவைகளை கட்டுப்படுத்தும் விதமாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் செய்யும் திட்டம் இந்த ஆண்டு நடை முறைக்கு வருகிறது.

எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்

அதற்காக இந்த பட்ஜெட்டில் 27 லட்சத்து 17ஆயிரத்து 45 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாய்பிடிக்கும் சிறப்பு படை ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. இதில் கால்நடை மருத்துவர்கள்,சுகாதார பணியாளர்கள், மற்று சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு இருக்கும்.

பிடிபடும் தெருநாய்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வண்ணம் இந்த படை செயல்படும். பிடிபடும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அதன் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

எலி வேட்டைக்கு 2 லட்சம்... நாய் கருத்தடைக்கு 27 லட்சம் - திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் ருசீகரம்

அடுத்தது எலி தொல்லை. கடந்த ஆண்டு மருத்துவமனைகள், அங்காடிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தொந்த‌ரவு செய்த 561 (அப்டி போடுங்க) எலிகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டுள்ளன.

##~~##
இந்த ஆண்டும் தீவிர எலிவேட்டை நடத்தி திருப்பூரை எலியில்லா மாநகராக‌ மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக‌ இந்த பட்ஜெட்டில் 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" இந்த தகவல்களை வாசித்த போது மேயருக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.
திருப்பூர் மாநகராட்சியில் நல்லா தான் பட்ஜெட் போடுறாங்கப்பா!
 
ஜி.பழனிச்சாமி