Published:Updated:

5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, 4 லட்சம் மோசடி!

5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, 4 லட்சம் மோசடி!
5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, 4 லட்சம் மோசடி!
5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, 4 லட்சம் மோசடி!

திருப்பூர்: திருப்பூரில் 5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி, 4 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் ராமைய்யா காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். பனியன் பிரிண்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் 5 கோடி ரூபாய் மற்றும் சொகுசு கார் ஒன்றும் பரிசாக விழுந்திருப்பதாகவும் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனைப் பெற வேண்டுமானால், ரூபாய் 4 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படியும் அந்த எஸ்.எம்.எஸ். தகவல் சொல்லியது. சீனிவாசனும் 4 லட்ச ரூபாயை மூன்று தவணைகளாக வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாள் கடந்து, பல நாட்கள் ஆகியும் அவருக்கு 5 கோடி ரூபாய் பணம் கிடைக்காததால், அவர் போலீஸில் புகார் செய்தார். இது பற்றி திருப்பூர் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

சீனிவாசனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.சில் சம்சன்தாம்சன், மிஸ்ஸா ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியை வைத்து போலீஸார் புலன் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இந்த வகையான மோசடிகள் அதிகம் நடந்து வருகின்றன.

- ஜி. பழனிசாமி