Published:Updated:

முன்னாள் அமைச்சருக்கு பி.ஏ.வாக செயல்பட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

முன்னாள் அமைச்சருக்கு பி.ஏ.வாக செயல்பட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
முன்னாள் அமைச்சருக்கு பி.ஏ.வாக செயல்பட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

சென்னை: முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு தனி உதவியாளராக பணியாற்றி  வந்த கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மோகன்குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக சிவபதி இருந்தபோது நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கல்வித்துறை பற்றி நன்கு தெரிந்த மோகன் குமாரை தனக்கு தனி உதவியாளராக நியமித்துள்ளார் அமைச்சர் சிவபதி. திடீரென்று மோகன் குமார், அமைச்சரின் உதவியாளராக நியமிக்கப்பட்டதால் உயரதிகாரிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

##~~##
இதன் விளைவாக, துறையின் உயரதிகாரியுடன் மோகன் குமார் மோதியதோடு, அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததன் காரணமாக, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்பட்டார்.
இதனிடையே, சிவபதியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், நேற்று மோகன் குமார் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவள்ளூர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகன்குமார், அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதால், ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன், இப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது.