Published:Updated:

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்தான்: ஜனாதிபதி பிரணாப்

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்தான்: ஜனாதிபதி பிரணாப்
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்தான்: ஜனாதிபதி பிரணாப்
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஊழல்தான்: ஜனாதிபதி பிரணாப்

புதுடெல்லி: ஜனநாயகத்துக்கு ஊழல்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியப் புலனாய்வு துறையின் பொன்விழா டெல்லியில் இன்று  கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொன்விழா மலரை வெளியிட்டு பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி," மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும். கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதில் இன்னும் மேம்பாடு அடைய‌ வேண்டும்.

சமுதாயச் சீர்கேட்டுக்கு சிறப்பற்ற ஆட்சி முறைதான் காரணமாக இருந்து இருக்கிற‌து. சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் ஆட்சி நடத்துபவர்கள் உறுதியாகவும், அதைக் குறிக்கோளாகவும் கொண்டிருக்க‌ வேண்டும்.

##~~##
இந்திய நாட்டின் ஜனநாயகத்துக்கு ஊழல்தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. எந்தக் குற்றவாளியும் தண்டனையில் இருந்து தப்பித்து விடக் கூடாது என்ற நோக்கத்துடன் போலீஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்" என்றார்.