Published:Updated:

தொடங்கியது மாம்பழ சீஸன்: விலை அதிகரிக்கும் அபாயம்

தொடங்கியது  மாம்பழ சீஸன்: விலை அதிகரிக்கும் அபாயம்
தொடங்கியது மாம்பழ சீஸன்: விலை அதிகரிக்கும் அபாயம்
தொடங்கியது  மாம்பழ சீஸன்: விலை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: இந்த ஆண்டுக்கான மாம்பழ சீஸன் தற்போது தொடங்கி விட்டது. குறிப்பாக சென்னைக்கு மாம்பழ வரத்து ஆரம்பித்து விட்டது.

கோடை காலம் ஆரம்பித்ததும் சில பழங்களுக்கு சீஸன் வரத் தொடங்கும். குறிப்பாக மாம்பழம் அதிக அளவில் வரும். இந்த ஆண்டும் மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது.

பங்கனபள்ளி, செந்தூரன் மாம்பழங்களின் வரத்து அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக 8 முதல் 10 லாரிகள் வரை மாம்பழம் வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பங்கனபள்ளி, செந்தூரன், ருமேனியா, அல்போன்சா, மல்கோவா போன்ற ரகங்கள் அதிகமாக வரும்.

சேலம்,  ஊத்துகோட்டை, விஜயவாடா, புத்தூர், நாகலாபுரம், மணவாளநகர், செங்காடு ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமாக வரும். இந்த ஆண்டு பெரும்பாலான இடங்களில் மாமரங்கள் பூத்து இருந்தபோது மழை பெய்ததால் பூக்கள் பெருமளவில் உதிர்ந்துவிட்டது. எனவே விளைச்சல் 60 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது.

##~~##
முக்கியமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லை. மேலும் பனிப் பொழிவு காரணமாக மாங்காய்கள் கறுப்பாக காணப்படுகிறது. எனவே மாம்பழங்கள் வரத்தும் குறைவாகவே இருக்கும்.
தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் சிறிய வடுமாங்காய்கள் உதிரவும் செய்கிறது. எனவே மாம்பழ விலை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்வாகவே இருக்கும் என தெரிகிறது. தற்போது ப‌ங்கனபள்ளி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையும், செந்தூரன் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.