Published:Updated:

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி குறைந்தது!

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்த ஆண்டு 282.6 லட்சம் டன் பொருட்களை கையாண்டு இருக்கிறது.

தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் நடராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது மேற்கண்ட தக வலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ''கடந்த ஆண்டில் வ்.உ.சி. துறைமுகத்தின் சரக்கு கையாளுதல் 281.05 டன் லட்சமாக இருந்தது.  இந்த ஆண்டு அதிலிருந்து 0.55 சதவிகிதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.

இந்த‌ ஆண்டில் இறக்குமதி அளவானது 1.49 சதவிகிதம் (198.54 டன்) அதிகரித்திருக்கும் அதேநேரம் ஏற்றுமதி அளவானது 1.63 சதவிகிதம் (184.03 லட்சம் டன்) 

##~~##
குறைந்திருக்கிறது. இந்த ஆண்டில் மொத்தம், 4 லட்சத்து 75 ஆயிரத்து 599 கண்டெய்னர் களை கையாண்டும் சாதனை படைத்திருக்கிறது தூத்துக்குடி துறைமுகம்" என்று சொன்னார்

-குளஸ்