Published:Updated:

புதுச்சேரியின் முன்னாள் எஸ்.எஸ்.பி. டாக்டர் பா.ஸ்ரீகாந்த் மாரடைப்பால் மரணம்!

புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னாள் எஸ்.எஸ்.பியும் அந்த‌மான் டி ஐ ஜியுமான டாக்டர் பா ஸ்ரீகாந்த இன்று காலை ஒன்பது மணியளவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்.
 
புதுவை மாநிலக் காவல் துறையின் முன்னாள் முதுநிலை காவல் கண்காணிப்பாளரான (எஸ்.எஸ்.பி) டாக்டர் பா.ஸ்ரீகாந்த்,  திருப்பூர் மாவட்டம் மூத்தாம்பாளையம் கிராமத்தைச் சேந்தவர். பாலசுப்ரமணியம் பொன்னம்மாள் தம்பதியின் மகனான இவர், விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் மருத்துவமும் சட்டமும் படித்தவர். பிறகு, யு.பி.எஸ் தேர்வும் எழுதி  1989 ல் புதுச்சேரியில்  காவல்துறை அதிகாரியாக‌ பணியில் சேர்ந்தார்.

தேசம் காக்கும் பணியின் ஓர் அங்கமாக, மத்திய உளவுத் துறையில் பல ஆண்டுகள் பல்வேறு

புதுச்சேரியின் முன்னாள் எஸ்.எஸ்.பி. டாக்டர் பா.ஸ்ரீகாந்த் மாரடைப்பால் மரணம்!

மாநிலங்களில் பணிபுரிந்த திருக்கிறார் ஸ்ரீகாந்த். புதுச்சேரி எஸ்.எஸ்.பி.யாக இருந்த இவருக்கு கடந்த‌ ஆண்டு மத்திய அரசு பதவி உயர்வு அளித்து அந்தமான் டி.ஐ.ஜியாக‌ பணியில் சேர்ந்தார்.

சிறந்த மனிதநேய காப்பாளரும் எழுத்தாளருமான ஸ்ரீகாந்த், முன்னாள் ராணுவ வீரர்களின் துயர சரித்திரத்தை  ' மறத்தல் தகுமோ ' என்ற தொடராக ஜூனியர் விகடனில் பதிவுசெய்தவர் .

நாற்ப்பத்தெட்டு வயதான ஸ்ரீகாந்திற்கு இன்று காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் ஸ்ரீகாந்த். அந்தமானிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் இன்று புதுச்சேரி கொண்டுவரப்படுகிறது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, புதுச்சேரியி லேயே ஸ்ரீகாந்தின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன‌.

-அறவாளி
படம்:
ஜெ.முருகன்