Published:Updated:

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்!

சென்னை: விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள கெட்டமைன் எனப்படும் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தேவி கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் பேங்காக் செல்வதற்காக இன்று அதிகாலை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்தார். பகட்டாக உடையணிந்திருந்த அந்த பெண்ணை சுங்கத்துறையைச் சேர்ந்த ரகசிய போலீசார் சந்தேகத்தின் பேரில் கண்காணித்தனர்.

##~~##
அவரது நடவடிக்கைகளில் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அப்பெண்ணை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது சூட்கேசில் பால் பவுடர், விபூதி பாக்கெட்டுகளுடன் 20 கிலோ அளவிற்கு கெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பெண்ணின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருக்கிறதா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.