Published:Updated:

2ஜி.. வழக்கம் போல் இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.2,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், தொடர்ந்து 15-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முற்றிலும் முடக்கப்பட்டது.  ##~~## 
 
மக்களவை இன்று கூடியவுடன், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை கோரி பிஜேபி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

"எங்களுக்கு ஜே.பி.சி. வேண்டும்," என்று பிஜேபி, சிவசேனை, அதிமுக மற்றும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் ஒருமித்து கோஷம் எழுப்பினர்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.

அவையில் தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நிலவியதால் மக்களவையை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதனால், தொடர்ந்து 15வது நாளாக கேள்வி - நேரம் நடைபெறவில்லை.

பின்னர், அவை மீண்டும் கூடியதும், இதே விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட, மக்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்னைகளின் எதிரொலியாக, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

2ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிவிக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என்று எதிர்கட்சிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.