Published:Updated:

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்ததால் இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 மின் உற்பத்தி யூனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென இரண்டு யூனிட்டுகளில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்ததைத் தொடர்ந்து அந்த யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

-எஸ்.சரவணபெருமாள்