Published:Updated:

ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)

ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)
ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)

சென்னை: ராமேஸ்வரத்தில் யாத்திரிகர்கள் ஆம்புலன்ஸ் வேன், ஆட்டோ மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அங்கு பதற்றம் நிலவுகிறது.
 

ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)

ராமேஸ்வரம் அருகே வேர்கோட்டில் கடந்த மாதம் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே அடி, தடி மோதல் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)

அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் அங்கு அமைதி திரும்பியது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் அகில இந்திய யாத்திரிகர்கள் பணியாளர் சங்கம் சார்பில் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வாங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் வேன் அனைத்து சமுதாயத்தினர் பயன்பாட்டுக்கும் செயல்பட்டு வந்தது. நேற்றிரவு ஆம்புலன்ஸ் வேன் அங்குள்ள கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது.
 

ஆம்புலன்ஸ், ஆட்டோ உடைப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் (படங்கள்)

அப்போது ஒரு ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள், இரும்பு கம்பியால் ஆம்புலன்ஸ் வேன், ஆட்டோவை அடித்து நொறுக்கி விட்டு தப்பினர்.

இன்று காலை ஆம்புலன்ஸ் வேன், ஆட்டோ அடித்து உடைக்கப்பட்ட தகவல் அகில இந்திய யாத்திரிகர்கள் பணியாளர்கள் சங்கத்தினருக்கு தெரியவந்தது.

##~~##
அவர்கள் ராமேஸ்வரம் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு ஆம்புலன்ஸ், ஆட்டோவை அடித்து உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
போலீஸ் நிலையம் திரண்ட பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
உ.பாண்டி