Published:Updated:

தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பம் உடைப்பு: அரியலூரில் பதற்றம் (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பம் உடைப்பு: அரியலூரில் பதற்றம் (படங்கள்)
தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பம் உடைப்பு: அரியலூரில் பதற்றம் (படங்கள்)

அரியலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிக் கம்பத்தை பா.ம.க.வினர் உடைத்ததோடு, கொடிகளை கிழித்து எறிந்ததால் இரு கட்சியினர் இடையே எந்நேரத்திலும் கலவரம் உருவாக வாய்ப்பு இருப்பதால் அரியலூரில் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பம் உடைப்பு: அரியலூரில் பதற்றம் (படங்கள்)

அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில், 5 ஒன்றியங்களில் அரசியல் கட்சிகளால் சொல்லும் அளவுக்கு பிரச்னைகள் ஏதும் இல்லாத நிலையில், செந்துரையில் மட்டும் பலமுறை பிரச்னைகள் நடந்த வண்ணமாக இருந்து வருகிறது. நின்னியூரில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய அனைத்து கட்சிகளின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக்கம்பம் உடைப்பு: அரியலூரில் பதற்றம் (படங்கள்)

இந்நிலையில், பா.ம.க. மாநில துணை பொதுச்செயாளர் சாமிதுரை தலைமையில்

##~~##
கடந்த 14ஆம் தேதி தே.மு.தி.க., அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் கொடிகளை மறைக்கும் வண்ணம் பா.ம.க.வினர் பேனர் வைத்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிக் கம்பை ஒடித்து, கொடிகளை தூக்கி எறிந்து விட்டனர்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை மாவட்ட செயலாளர் சாமி நாதன், பெரம்பலூர் போலீசில் இன்ஸ்பெக்டர் சந்திரனிடம் புகார் செய்தார். ஆனால், இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்ததோடு, ‘இது உங்க பிரச்னைதான். நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.
போலீசாரும் பா.ம.க.வுக்கு சாதகமாக செல்லும் இதே நிலை தொடர்ந்தால், விரைவில் பா.ம.க.வுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்படலாம்.

ஆர்.ராமசாமி